உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருவேறு இடங்களில் 150 சவரன் கொள்ளை

இருவேறு இடங்களில் 150 சவரன் கொள்ளை

அன்னுார்:கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்து வழியாம்பாளையத்தில் 'இவா' அபார்ட்மென்ட் என்ற பெயரில், தனித்தனியே பங்களா வீடுகள் உள்ளன. இங்கு, பாலசுப்பிரமணியம், 56, என்ற விவசாயி மனைவி சுதாவுடன் வசித்து வருகிறார். கடந்த 30ம் தேதி மனைவியுடன் பொள்ளாச்சி அருகே தோட்டத்திற்கு சென்று, 31ம் தேதி மாலை வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 100 சவரன் தங்கம், 75 காரட் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய். கோவில்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். அதே பகுதியில் விஜயகுமார், 41, வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. ஆனால், எதுவும் திருட்டு போகவில்லை. கொள்ளையர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.அதேபோல, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் பூர்வீக வீடு கண்டரமாணிக்கம் திருப்புத்துார் ரோட்டில் உள்ளது. அக்., 30ல் அந்த வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.அவர் வந்து பார்த்தபோது, உள்ளே பீரோவில் இருந்த 52 கிலோ வெள்ளி பொருட்கள், 15 சவரன் வைர நகைகள் உட்பட 50 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு, 25.25 லட்சம் ரூபாய். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை