அறுவை சிகிச்சையில் அசத்தும் ரோபோ
கோவை; கோவை ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், கடந்த ஓராண்டாக 150 அறுவை சிகிச்சைகள், ரோபோ உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில் கடந்த ஓராண்டாக, 'டாவின்சி ரோபோடிக் -11' எனும் ரோபோ, அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து துறைகளிலும் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ''ரோபோ அறுவைசிகிச்சை மேற்கொள்வதால், துல்லியத்தன்மை அதிகரித்துள்ளது. ரத்த இழப்பு குறைவாகவும், நோயாளி குணமாகும் நாட்கள் விரைவாகவும் உள்ளது, '' என்றார். நிகழ்வில் ரோபோடிக் அறுவைசிகிச்சை திட்டபொறுப்பாளர் டாக்டர் பிரவீன் ரவிசங்கரன், புற்றுநோயியல் துறைத்தலைவர் அருள்ராஜ், ரோபோடிக் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் வெங்கடேஷ், மகளிர் மருத்துவ புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் லதா பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.