வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த வேலைக்கு ஆந்திர மக்களை இறக்கி விட்டவர்கள் யார்? அந்த சார் யார்?
மேலும் செய்திகள்
சைபர் கிரைம் கும்பல் ரூ.4.46 லட்சம் மோசடி
02-Jul-2025
பெ.நா.பாளையம்; கோவை துடியலுாரில் நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் அடுத்தடுத்து நடந்த பிக்பாக்கெட் சம்பவத்தில், ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமான ரொக்க தொகை திருட்டு போனது.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் காலை மேட்டுப்பாளையத்தில் நடந்தது. அக்கூட்டத்தின் போது இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கத்தொகை பல்வேறு நபர்களிடமிருந்து பிக் பாக்கெட் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் ட்ரோன் கேமரா வாயிலாக ஆய்வு செய்ததில், ஆந்திராவை சேர்ந்த கும்பல் ஒன்று பிக்பாக்கெட் நடத்தியது தெரியவந்தது. அவர்களில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துடியலுாரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் பன்னிமடையைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் இருவரிடமிருந்து தலா, 34 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் என, திருட்டு போனது. இதே போல சோமையம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகியிடமிருந்து, 24 ஆயிரம் ரூபாயும், சின்ன தடாகத்தைச் சேர்ந்தவரிடமிருந்து, 7 ஆயிரம் ரூபாயும் பிக்பாக்கெட் செய்யப்பட்டது. ஆனால், இது குறித்து பணத்தை இழந்தவர்கள் துடியலுார் போலீசில் புகார் செய்யவில்லை.
இந்த வேலைக்கு ஆந்திர மக்களை இறக்கி விட்டவர்கள் யார்? அந்த சார் யார்?
02-Jul-2025