உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.2 கோடி மோசடி: ஆறு பேர் மீது வழக்கு

ரூ.2 கோடி மோசடி: ஆறு பேர் மீது வழக்கு

கோவை : கேரளாவை சேர்ந்தவரிடம், இரிடியம் தருவதாகக் கூறி ரூ.2 கோடி மோசடி செய்த ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கேரளா மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ், 55. அவருக்கு சொந்தமான நிலம் மண்ணார்காட்டில் உள்ளது. அதை விற்க திட்டமிட்டார். இந்நிலையில், அபுபக்கர், 48 என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக அப்துல் அஜீஸிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். கோவையில் உள்ள சிலர் அப்துல் அஜீஸின் நிலத்தை வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.இதையடுத்து, அஜீஸ் கோவை வந்தார். அப்போது அபுபக்கருடன், ஜான் பீட்டர், 39, செந்தில்ராஜ், 47, ஜனகன், 50, ஜோதிராஜ், 42 மற்றும் அனில்குமார், 51 ஆகியோர் இருந்தனர். அவர்களை சந்திந்தபோது, ஜான் பீட்டர் தனது மொபைல் போனில் இருந்த ஒரு படத்தை காட்டியுள்ளார். அதில் சிறிய பானை ஒன்று இருந்துள்ளது. அந்த பானைக்குள், ரூ.10 கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாகவும், அதை அப்துல் அஜீசுக்கு ரூ.2 கோடிக்கு தருவதாகவும் ஜான் பீட்டர் தெரிவித்தார். கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அபுபக்கர் மற்றும் ஜான் பீட்டரை சந்தித்து, ரூ.2 கோடி பணத்தை அப்துல் அஜீஸ் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற அவர்கள் இரிடியத்தை தரவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை.ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்துல் அஜீஸ், கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆறு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை