உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.29 லட்சம் நிலம் மோசடி; மூவர் மீது வழக்கு பதிவு 

ரூ.29 லட்சம் நிலம் மோசடி; மூவர் மீது வழக்கு பதிவு 

கோவை: திருப்பூர் மாவட்டம், ராக்கிபாளையம் பிரிவு, பிரபு நகரில் வசித்து வருபவர் பானுபிரியா,35; இவர், கணவர் விக்ரமுடன் சேர்ந்து, காலியிடம் வாங்குவதற்கு பல இடங்களில் விசாரித்தனர். அப்போது, துடியலுார் பகுதியை சேர்ந்த கனகராஜ், சண்முகம், வினோத் ஆனந்த் ஆகியோர், துடியலுார் பகுதியில், 1,706 சதுர அடி இடம் இருப்பதாகவும், அந்த இடத்தை கிரயம் முடித்து தருவதாகவும் கூறி, 28.7 லட்சம் ரூபாய் வாங்கினர்.பத்திரவுப்பதிவு அலுவலகத்தில் கிரயம் செய்து முடித்த பிறகு விசாரித்த போது, அந்த இடம் தொடர்பாக செல்வராஜ் என்பவர், சிவில் வழக்கு தொடர்ந்து, கோர்ட்டில் நிலுவையில் இருப்பதை அறிந்தனர்.ஏமாற்றமடைந்த பானுபிரியா பணத்தை திருப்பி கேட்ட போது , மூவரும் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்தனர். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் பானுபிரியா புகார் அளித்தார். புகாரின் பேரில், கனகராஜ், சண்முகம், வினோத் ஆனந்த் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ