உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.51.72 கோடி ஒதுக்கீடு இனி கூடுதல் ரயில்கள் கிடைக்க வாய்ப்பு

கோவை மாவட்ட ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.51.72 கோடி ஒதுக்கீடு இனி கூடுதல் ரயில்கள் கிடைக்க வாய்ப்பு

கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷனை மையப்படுத்தி, பல்வேறு பணிகள் மேற்கொள்ள ரூ.51.72 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புஉள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக, ஆண்டுக்கு, ரூ.320 கோடி வரை வருவாய் ஈட்டித்தரும் ரயில்வே ஸ்டேஷனாக கோவை இருக்கிறது. என்றாலும் கூட, பல்வேறு நகரங்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்பட வில்லை. கோவையின் தேவையைபட்டியலிட்டு, ரயில்வே துறைக்கு தொழில்துறையினரும், மக்கள் பிரதிநிதிகளும் கோரிக்கை மனுக்கள் அனுப்பினர். இதையடுத்து, முதல்கட்டமாக, 51.72 கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ள, தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கியுள்ளது.நடப்பு, 2025-26ம் ஆண்டுக்கான பணிகளின் பட்டியலில், மூன்று மற்றும் நான்காவது ரயில் பாதை, கோவை - ஜோலார்பேட்டை வரை, 282 கி.மீ.,க்கான இறுதி ஆய்வுப் பணிக்கு ரூ.5.64 கோடி, மூன்று மற்றும் நான்காவது ரயில் பாதை, கோவை - சொரனுார் வரையிலான, 99 கி.மீ.,க்கான இறுதி ஆய்வுப் பணிக்கு ரூ.1.98 கோடி, கோவையில் எல்.எச்.பி., ரயில் பெட்டி பராமரிப்புப் பணி மேம்படுத்தலுக்கு ரூ.2.97 கோடி, கோவை - போத்தனுார் சந்திப்பில், ரயில் பெட்டி பராமரிப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.41.13 கோடி என, ரூ.51.72 கோடியை தெற்கு ரயில்வே ஒதுக்கியுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதன் மூலம், பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வசதி கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ