உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிவானந்தா காலனி, பேரூரில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

சிவானந்தா காலனி, பேரூரில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

கோவை : ஆர்.எஸ்.எஸ்., நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு, கோவை மாநகரில் நேற்று மாலை 4:10 மணிக்கு, சிவானந்தா காலனி, பேரூரில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் சிவகணேஷ், லைப்கேர் மருத்துவமனை டாக்டர் ஜெயக்குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் துவக்கி வைத்தனர். அணிவகுப்பு ஊர்வலம் சிவானந்தா காலனி, சுப்பத்தாள் லேஅவுட், தயிர் இட்டேரி சாலை, கண்ணப்ப நகர், நல்லாம்பாளையம், ராமசாமி நகர் வழியாக நல்லாம்பாளையம் சாலை அமிர்தா பள்ளி மைதானத்தில் நிறைவு பெற்றது.அணிவகுப்பு ஊர்வலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். முன்னதாக டிரம்ஸ் இசை முழங்க, காவிக்கொடி ஏந்தி தொண்டர்கள் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை