உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு, தனியார் பஸ்களுக்கு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

அரசு, தனியார் பஸ்களுக்கு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி -- கோவை வழித்தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., எச்சரித்துள்ளார்.பொள்ளாச்சி -- கோவை வழித்தடத்தில், நாள்தோறும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்குகின்றன. இது பெரும்பாலான தனியார் பஸ்கள் மற்றும் ஒரு சில அரசு பஸ்கள் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக செல்லாமல், மேம்பாலத்தின் மீது செல்வதால், கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தவிர்க்கும் பொறுட்டு அரசு அதிகாரிகளிடம் மக்கள் மனு அளித்தனர். ஆனால் இப்பிரச்னை தீர்ந்தபாடில்லை.தற்போது இப்பிரச்னையை சரி செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சார்பில், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் சர்வீஸ் ரோடு அருகே அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.அதில், 'பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக செல்ல வேண்டும். இல்லாவிட்டால், பஸ் மற்றும் ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை, பின்பற்றி, பஸ்கள் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்வதை அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !