உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடுதல் பஸ்கள் இயக்குங்க; கிராம மக்கள் வலியுறுத்தல்

கூடுதல் பஸ்கள் இயக்குங்க; கிராம மக்கள் வலியுறுத்தல்

உடுமலை,; உடுமலை - பல்லடம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இத்தடத்தில், குடிமங்கலம், பெரியபட்டி, சித்தம்பலம், கேத்தனுார், மந்திரிபாளையம், குள்ளம்பாளையம், வாவிபாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிப்புத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.கிராமங்களில் இருந்து, ஏராளமான தொழிலாளர்கள், தினசரி, திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் உள்ளிட்ட நிறுவனங் களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.திருப்பூர் பகுதிகளில் உள்ள கல்லுாரிகளுக்கும் எண்ணற்ற மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். தினசரி இவ்வழித்தடங்களில் இயங்கும் பெரும்பாலான அரசு - தனியார் பஸ்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் நிரம்பி வழிந்தே செல்கின்றன.பொதுமக்கள் கூறுகையில், 'காலை மற்றும் மாலை நேரங்களில், பெரும்பாலான பஸ்கள் கிராமங்களில் நிற்காமல் செல்கின்றன. வேலைக்குச் செல்பவர்கள், மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். சிலர், டூவீலர்களிலேயே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. இவ்வழித்தடத்தில், கூடுதல் பஸ்களை இயக்குவதுடன், வழியோர கிராமங்களில் நின்று செல்ல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை