உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் கல்லுாரி சார்பில் ரன் பார் பீஸ்

இந்துஸ்தான் கல்லுாரி சார்பில் ரன் பார் பீஸ்

கோவை: இந்துஸ்தான் கல்லுாரி சார்பில் நடந்த, 'ரன் பார் பீஸ்' என்ற மராத்தானில், ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உணவு மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தையொட்டி, 'ரன் பார் பீஸ்' என்ற தலைப்பிலான மராத்தான் நேற்று நடந்தது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வ.உ.சி., மைதானத்தில் காலை, 6:30 மணிக்கு துவங்கிய மராத்தானை, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கொடி அசைத்து துவக்கிவைத்தார்.இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், மாவட்ட சுற்றுலா அதிகாரி ஜெகதீஸ்வரி, ஓட்டல் மேலாண்மை துறை தலைவர் பிரேம்கண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இதில், கல்லுாரி மாணவர்கள், ஓட்டல், சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் எல்.ஐ.சி., சிக்னல், அண்ணாதுரை சிலை, தாமஸ் பார்க், ரேஸ்கோர்ஸ் வழியாக, 5.2 கி.மீ., சென்று மீண்டும் வ.உ.சி., மைதானத்தை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை