தொழிலாளி கொலை: ரூரல் எஸ்.பி. விசாரணை
கோவில்பாளையம்: ஆடு மேய்க்கும் தொழிலாளி கொல்லப்பட்ட இடத்தில் ரூரல் போலீஸ் எஸ்.பி. விசாரணை நடத்தினார். சூலூர் அருகே முத்து கவுண்டன் புதூரை சேர்ந்த மாரப்பன் மகன் தேவராஜ், 55, ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை செரயாம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்நிலையில் நேற்று கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அவருடன் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன், கோவில் பாளையம் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோரும் பங்கேற்றனர். தேவராஜ் உடல் கிடந்த இடத்துக்கு அருகில் வசிப்போர் மற்றும் தேவராஜின் உறவினர்கள், தெரிந்தவர்கள் என 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.