மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு
16-Nov-2024
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம் கிராமத்தில், அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் கிராமப்புற பயிற்சி திட்டம் மேற்கொண்டனர்.கிணத்துக்கடவு அரசம்பாளையம் அமிர்தா வேளாண் கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராமப்புற பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குளத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு, பருவ கால பயிர்களின் நாட்காட்டி செயல்பாட்டை விளக்கிக்கூறினர். மேலும், விவசாயிகள் முன்னிலையில் ஓவியம் வரைந்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, விவசாயிகளிடம் இப்பகுதியில் விளையும் முக்கிய பயிர் மற்றும் அதன் காலநிலை குறித்து மாணவர்கள் கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில், விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
16-Nov-2024