முன்னணி நிறுவனங்களில் ஆர்.வி.எஸ்., மாணவர்களுக்கு பணி நியமனம்
கோவை: சூலுார், ஆர்.வி.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 12வது வேலைவாய்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில், காக்னிசண்ட், விப்ரோ, டி.சி.எஸ்., கே.ஜி.ஐ.எஸ்., சதர்லேண்ட் உள்ளிட்ட 85 முன்னணி நிறுவனங்களில், 646 மாணவர்கள் பணிநியமன கடிதங்களை பெற்றனர். அதிகபட்சமாக, ஆண்டுக்கு 6 லட்சம் வரை மாணவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தலைமை விருந்தினராக கோவை லாஜிக் வேலியின் மூத்த மனித வள மேலாளர் அரவிந்த் தண்டபாணி கலந்துகொண்டு, முன்னணி நிறுவனங்களில் பணிபுரிய, தன்னம்பிக்கை, நெகிழ்வுத்தன்மை, இடமாற்றத்திற்குத் தயார், நிறுவன வளர்ச்சிக்கு பங்களிப்பு போன்ற பண்புகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.கல்லுாரி முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் அய்யப்பா தாஸ், வேலைவாய்ப்புப் பிரிவின் இயக்குனர் மஞ்சு, வேலைவாய்ப்பு அதிகாரி ராம்குமார் பொன்ராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.