உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாயஇருதய ஆலய தேர்த்திருவிழா

துாயஇருதய ஆலய தேர்த்திருவிழா

வால்பாறை; வால்பாறையில் துாயஇருதய ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை துாயஇருதய ஆலயத்தின் நுாற்றாண்டு விழா, இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆலயத்தின் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு பொள்ளாச்சி மறைமாவட்ட முதன்மை குரு ஜேக்கப் தலைமையில் கொடியேற்றப்பட்டது.அதனை தொடர்ந்து, கருமலை மாதா ஆலயத்தில் காலை, 11:00 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. விழாவில்,நாள் தோறும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் திவ்யநற்கருணை நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக, வரும் 28ம் தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜெகன்ஆண்டனி மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி