உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூட்டானின் தேசிய தின விழாவில் அரசு விருந்தினராக சத்குரு பங்கேற்பு

பூட்டானின் தேசிய தின விழாவில் அரசு விருந்தினராக சத்குரு பங்கேற்பு

தொண்டாமுத்தூர் : பூட்டானில் நடக்கும் தேசிய தின விழாவில், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் அரச விருந்தினராக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்து கொண்டார். பூட்டானின் முதல் மன்னர் கோங்சார் உக்யென் வாங்சுக்கின் முடிசூட்டு விழா, 1907ம் ஆண்டு நடந்தது. இதனைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிச.,17ம் தேதி, பூட்டானில் தேசிய தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் துடிப்பான கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நடைபெறும். விழாவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கின் அழைப்பின் பேரில், அரசு விருந்தினராக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ