உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி

கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாப்பு பெட்டக வசதி

சூலுார்; ஜே.கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜே. கிருஷ்ணாபுரத்தில் உள்ள, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,1954ல் துவக்கப்பட்டது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் இந்த சங்கத்தில், வாடிக்கையாளரின் நலன் கருதி, தனி நபர் பாதுகாப்பு பெட்டக சேவை துவக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சரக துணை பதிவாளர் சுவேதா திறந்து வைத்தார். தொடர்ந்து, 15 வாடிக்கையாளர்கள் பெட்டகத்தை பயன்படுத்த பதிவு செய்தனர்.தானிய ஈட்டுக்கடனாக, 25 லட்சம் ரூபாய் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவின் சார்பில், 10 லட்சம் ருபாய் வைப்புத் தொகை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், துணை பதிவாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் கதிர்வேல், வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !