மேலும் செய்திகள்
கண்ணன் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேகம்
30-Dec-2025
கருமத்தம்பட்டி: உலக நலன் வேண்டி, 45 நாட்கள் நடக்கும் சகஸ்ர மகா சண்டி யாகம் ஊத்துப்பாளையத்தில் நேற்று துவங்கியது. ஜெய்ஹிந்த் பாரத பண்பாடு கலாசார அறக்கட்டளை சார்பில், அரசூர் ஊராட்சி ஊத்துப்பாளையத்தில், உலக நன்மைக்காக, 45 நாட்கள் மகா சகஸ்ர சண்டி யாகம் நடக்கிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு, ஊத்துப் பாளையம் சாமுண்டீஸ்வரி கோவிலில் இருந்து ஜோதி யாகசாலைக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, 8:00 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன் கணபதி ஹோமம் மற்றும் ஜெபம் துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாகம் நடந்தது. 5ம்தேதி முதல் ஐந்து நாட்கள் சத்ரு சம்ஹார யாகம் மற்றும் ஜபம் நடக்கிறது. அகோர சிவ யாகம் 11ம்தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. பிரத்தியங்கரா யாகம், சுதர்சன யாகம், அஷ்ட பைரவ யாகம், நவக்கிரக யாகம், ருத்ர யாகம் தலா மூன்று நாட்கள் நடக்கிறது. பிப்., 4 முதல், 13ம்தேதி வரை சகஸ்ர சண்டி யாகம் நடக்கிறது. மடாதிபதிகள், நாகா சாதுக்கள், சன்யாசிகள் ஆசி வழங்க உள்ளனர். அறக்கட்டளை நிர்வாகி முருகேசன் தலைமையில் விழா குழுவினர், ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
30-Dec-2025