மேலும் செய்திகள்
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடு அமர்க்களம்
23 hour(s) ago
கோவை, சாய்பாபா கோயிலில்ஆங்கில புத்தாண்டை ஓட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தங்கத்தேர் இழுத்தல், திருவிளக்கு வழிபாடு உள்ளிட்டவை நடந்தது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபாகோயில் என்றழைக்கும் நாகசாயி மந்திர் அமைந்துள்ளது. நாகசாயி அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5:15 க்கு ஹாரத்தியும், 6 மணிக்கு துனிபூஜை. 6:30 க்கு சாய்ஹோமம், 7:45 க்கு அபிஷேகம், 11 மணிக்கு நாமசங்கீர்த்தன சாய் பஜனை, 12 மணிக்கு மங்கலஹாரத்தி, 12:30 க்கு மதிய ஹாரத்தி நடந்தது. மாலை 4 மணிக்கு கோயில் திறக்கப்பட்டது. 6:15 க்கு சிறப்பு ஹாரத்தியும், 6:45 க்கு நாமசங்கீர்த்தன சாய் பஜனையும், 7:30 க்கு திருவிளக்கு வழிபாடும், 8 மணிக்கு தங்கத்தேர் வலம் வருதலும், 8:30 க்கு மஹாமங்கல ஹாரத்தியும் நடந்தது. நேற்று வழிபாட்டுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பாபாவுக்கு வைத்து பூஜித்த சிறப்பு பிரசாதங்களும், 10 ரூபாய் நோட்டுக்களும் வழங்கப்பட்டது.
23 hour(s) ago