உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சக்தி பாலநாகம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சக்தி பாலநாகம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.கே.வி., நகரில் உள்ள சக்தி பாலநாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவை ஒட்டி மூலவர் திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு, திருநீறு வழங்குதல், முதல் கால வேள்வி வழிபாடு, நவமணி இருத்தல், இயந்திர தகடு நிறுவுதல், எண் வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்த குடங்கள் வேள்விச்சாலையில் எழுந்தருள செய்து, கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை