உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மையத்தடுப்பில் படிந்த மணல்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்

மையத்தடுப்பில் படிந்த மணல்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்

பொள்ளாச்சி: நகரில், ரோட்டின் நடுவே அமைந்துள்ள மையத்தடுப்பானில் படிந்து நிற்கும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சியில் இருந்து, பிரதான நகரங்களுக்கு செல்லும் சாலை, அடுத்தடுத்து அகலப்படுத்தப்பட்டு, ரோட்டின் நடுவே மையத்தடுப்பான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், நகரைச் கடந்து செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து பிரச்னை ஓரளவுக்கு சமாளிக்கப்படுகிறது. ஆனால், முறையாக மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன போக்குவரத்தின் போது,அடித்து செல்லப்படும் மணல், மையத்தடுப்பான் ஓரத்தில் குவிந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக, நகரில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ரோடு முழுவதும் புழுதி மண் பறக்கிறது. குறிப்பாக, கனரக வாகனங்கள் செல்லும் போது, மணல் துகள்கள் காற்றில் பறப்பதால் பின் தொடர்ந்து செல்லும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது. சில சமயங்களில் இதன் காரணமாக விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சாலையில் மையத்தடுப்பானை ஒட்டி படிந்து நிற்கும் மணலை அவ்வபோது அகற்ற நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை