சந்தனமரம் வெட்டிக்கடத்தல்; மர்மநபர்களுக்கு வலை
கோவை; சந்தனமரத்தை வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சுப்ரமணியம், 65. ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அலுவலர். கடந்த, 31 ம் தேதி இரவு துாங்கச் சென்றார். மறுநாள் காலை 5:30 மணிக்கு எழுந்து கதவை திறந்த போது அது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டின் பின்வாசல் வழியாக வெளியில் வந்து பார்த்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் சுப்ரமணியம் வீட்டில் இருந்த, 20 ஆண்டு பழமையான சந்தனமரத்தை வெட்டி கடத்தியது தெரிந்தது. அக்கம்பக்கதினரிடம் விசாரித்த போது, மர்மநபர்கள், அருகில் இருந்த தனியார் நிறுவனத்திலும் சந்தனமரத்தை வெட்டிக்கடத்த திட்டமிட்டது தெரிந்தது. இதுகுறித்து சுப்ரமணியம், துடியலுார் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரிக்கின்றனர்.