உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துாய்மை பணியாளர்கள் போராட்டம் 

 துாய்மை பணியாளர்கள் போராட்டம் 

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், 55 துாய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக, கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வினர் தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இன்று வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தினால் வால்பாறை நகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று குப்பை அகற்றும் பணிகள் பாதித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை