உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புடவைக்காரி மகாலட்சுமி கோவில் ஆண்டு விழா

புடவைக்காரி மகாலட்சுமி கோவில் ஆண்டு விழா

சூலுார்; புடவைக்காரி மகாலட்சுமி அம்மன் கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.பாப்பம்பட்டி பிரிவில் உள்ள புடவைக்காரி மகாலட்சுமி அம்மன் கோவில், கருப்பராயன், கன்னிமார் கோவில் பழமையானது. இங்கு மூன்றாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை சிறப்பு ஹோமம் மற்றும், திரவிய அபிஷேகம், தீர்த்தாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில் பூஜாரி பேச்சிமுத்து, சிவசாமி, பழனிசாமி, மாணிக்கம், விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை