உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை விபத்துகளில் உயிர்களை... காக்க... காக்க! : மாநகர போலீசார் புதிய திட்டம்

சாலை விபத்துகளில் உயிர்களை... காக்க... காக்க! : மாநகர போலீசார் புதிய திட்டம்

கோவை:விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அந்தந்த பகுதிகளில், மாநகரின் முக்கிய இடங்களில், அனைத்து வசதிகளும் கூடிய ஆம்புலன்ஸ்களை நிறுத்த, மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தான் சென்று கொண்டிருந்தது அந்த குடும்பத்தலைவரின் வாழ்க்கை. ஆனால், ஒரு நொடி தான். அத்தனையையும் மாற்றி விட்டது அந்த விபத்து. விபத்தில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்த நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், '10 நிமிடத்துக்கு முன் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்றபோது, அடக்க முடியாமல் கதறுவதை தவிர, அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

இது போல் பத்து நிமிட தாமதம்தான், இன்று பலர் உயிரிழக்க காரணமாகி விடுகிறது. இந்த உயிரிழப்புகளை தடுக்க, விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட இடங்களில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோவையில், கடந்த ஜன., முதல், அக்., வரை, சாலை விபத்துகளில், 227 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 111 பேர் விபத்து நடந்த இடத்திலும், 80 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், 36 பேர் சிகிச்சையின் போதும், உயிரிழந்துள்ளனர் . கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில், ''சாலை விபத்துகளை தவிர்க்க, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு தனியார் பங்களிப்புடன், அனைத்து வசதிகளும் கூடிய ஆம்புலன்ஸ்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்து நடந்த உடன், அவர்களுக்கு விரைந்து முதலுதவி கிடைக்கும். உயிரிழப்புகள் தடுக்கப்படும். இதற்கு சில அமைப்புகள் முன்வந்துள்ளன. அவர்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D. Singaram
டிச 29, 2025 14:26

நல்ல முயற்சி. அதற்கு முன் விபத்தைக் குறைப்பதிற்கும் முயற்ச்சிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் இடது புறத்தில் செல்வதை keep left என்பதை தவிர்த்து வலது ஓரத்திலும், சாலையின் நடுவிலும் செல்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் இதனால் ஒன்றும் பெரிதாக பிரச்சினை இல்லை. இதைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால், போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களிலும், நெடுஞ்சாலைகளிலும், புதிதாக அமைக்கப் பட்ட அவிநாசி சாலை மேம்பாலத்திலும் கூட இரு சக்கர வாகனங்களில் குடும்பத்துடனும், குழந்தைகளைனுடனும் அருகில் வரும் வாகனங்களின் வேகம் அறியாது நடுவில் செல்கிறார்கள். இவர்கள் செல்வதை பார்த்தால் நமக்கு பயமாக இருக்கிறது. விபத்தில்லா சாலைப் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் எண்ணம்


jkrish
டிச 29, 2025 05:51

மிகவும் வருத்தமான விஷயம், அரசு இயந்திரம் விபத்து நடப்பதை தடுக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டது.


புதிய வீடியோ