மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் குழந்தைகள் சிறப்பு மையம் வேண்டும்
21-Apr-2025
கோவை, ; கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்கும்நடவடிக்கைகளுக்கான, கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளன.தற்போதைய கணக்குப்படி, கோவை மாவட்டத்தில் 3,416 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு வீட்டு வழிக் கல்வி, பகல் நேர மையங்கள் மற்றும் பள்ளிகளில் கல்வி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தமாக 68 பயிற்றுநர்கள், 9 பிசியோதெரபிஸ்ட் மற்றும் 1 ஆசிரியருக்கு 50 மாணவர்கள் என்ற விகிதத்தில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.5 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது திறன்களை அடிப்படையாகக் கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. வீட்டு வழிக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.200 வீதம், வருடத்திற்கு ரூ.2,400 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளின் வாயிலாக மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனைமலை மற்றும் வால்பாறை வட்டார மையங்களில், குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.ஒன்றாம் வகுப்பில் பயிலும், அறிவுசார் குறைபாடுள்ள மாணவர்களுக்கு அரும்பு நிலைபயிற்சி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களின் நிலைக்கு ஏற்ப பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை, சுழற்சி முறையில் ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர். இம்மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி விவரங்கள், எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களுக்கு தேவையான அடையாள அட்டை, வீல் சேர் போன்ற அடிப்படை உதவிகளை ஆசிரியர்கள் அரசிடம் பெற்றுத்தருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
21-Apr-2025