உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

மேட்டுப்பாளையம்: காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 44 வது ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி தாளாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அறங்காவலர் சபிதா ராமகிருஷ்ணன், நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சூப்பர் டெக்ஸ் மில்ஸ் இயக்குனர் சங்கர் கிருஷ்ணா, கே.ஜி., என்டர்டைன்மெண்ட்ஸ் இயக்குனர் ஸ்ரீதர் கிருஷ்ணா ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர். விழாவில் பள்ளியின் செயலர் ஜெயகண்ணன், முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி நிக்ஷிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி