உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உண்டு உறைவிடப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

உண்டு உறைவிடப் பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம்

வால்பாறை; பழங்குடியின மாணவர்கள் படிக்கும் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்(பொ) செந்தில்குமார் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ராஜலட்சுமி, துணைத்தலைவராக சந்தியா, ஆசிரியர் பிரதிநிதியாக விஜயலட்சுமி, கல்வி ஆர்வலராக பிரியா மற்றும் பெற்றோர் பிரதிநிதிகளாக, 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் பேசியதாவது: பழங்குடியின மாணவர்கள் படிக்கும் இந்தப்பள்ளியில், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசின் சார்பில் செய்துதரப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் செட்டில்மென்ட் பகுதிக்கு வரும் குழந்தைகளை, குறிப்பிட்ட நாளில் மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும். மாதம் தோறும் நடைபெறும் கூட்டத்திற்கு பெற்றோர்கள் தவறாமல் பங்கேற்று, குறைகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ