உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவன் தற்கொலை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே சிறுவன் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே, ஜல்லிபட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன், பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிப்பு வரவில்லை, எவ்வளவு படித்தாலும் தனக்கு புரியவில்லை என கூறி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ