மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி
போத்தனூர்; கோவைபுதூர் அடுத்து அறிவொளி நகர் அருகேயுள்ள சமத்துவ நகரை சேர்ந்தவர் மதன்குமார் மகன் நந்தகுமார், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் ஜன்னல் ஓரத்திலுள்ள மின் கம்பத்தின் மேலேயுள்ள கம்பியில், அவரது ஸ்வெட்டர் விழுந்தது. அதனை நந்தகுமார், மாப் உதவியுடன் எடுக்க முயன்றார்.அப்போது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த மதுக்கரை போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.