வட்டார கலைத்திருவிழாவில் பள்ளி மாணவர்கள் அசத்தல்
வால்பாறை: வால்பாறை ஒன்றியத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான குறுமைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள், கடந்த மாதம் நடந்தன. இதனை தொடர்ந்து வட்டார அளவிலான கலைத்திருவிழா, வால்பாறை அரசு கல்லுாரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் செந்தில்குமார் வரவேற்றார். விழாவில், வில்லுப்பாட்டு, கோலம், ஓவியம், பாட்டு, மாறுவேடம், நடனம், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. கலைத்திருவிழாவில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள, 23 அரசு பள்ளிகளை சேர்ந்த, 150 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.