தமிழக அணிக்கு பள்ளி மாணவர் தேர்வு
பொள்ளாச்சி: ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. பள்ளி மாணவர், தமிழக வாலிபால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த, 17 வயது பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள், திருச்சி தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் நடந்தது. அதில், பள்ளி மாணவர் அஜய் பங்கேற்று விளையாடி வெற்றி பெற்றார். மேலும், தமிழ்நாடு வாலிபால் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இவர், இந்திய பள்ளி விளையாட்டு ஆணையம் சார்பில், உத்தரபிரதேசத்தில் நடத்த உள்ள 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ளார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் செயலர் ரங்கசாமி, தலைமையாசிரியர் கிட்டுசாமி, உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.