மாவட்ட அளவிலான போட்டி பள்ளி மாணவர்கள் வெற்றி
ஆனைமலை: ஆனைமலை அருகே, சேத்துமடை அரசு பள்ளி மாணவர், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். பள்ளி கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதில், சேத்துமடை அரசு பள்ளி மாணவி ரனுசிரிதன்சியா நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும், நரேன் குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும் பெற்றனர். தஞ்சாவூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் மாணவர் நரேன்குமார் பங்கேற்க தகுதி பெற்றார். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.