சச்சிதானந்த பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்தார். மதுரை குடும்ப நல நீதிமன்ற சிறப்பு மாவட்ட நீதிபதி அனுராதா, அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். நான்காம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் தங்கள், கலை, அறிவியல் படைப்புகளை, கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் பிரமோஸ் ஏவுகணை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், வான்வழி ஆராய்ச்சி ஆகிய படைப்புகள் மாணவர்களை அதிகம் கவர்ந்திருந்தது. இதை வைத்த மாணவர்களிடம், சிறப்பு விருந்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் இதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர். கண்காட்சியை வாழும் கலை பயிற்சி ஆசிரியர் சசிகுமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பார்த்தனர். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.