உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பறிமுதல்; ஒருவர் கைது

போதை பறிமுதல்; ஒருவர் கைது

போத்தனுார் : கோவை போத்தனுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராக்கியப்பன். சம்பவத்தன்று வெள்ளலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றார். சந்தேகத்துக்கிடமாக நின்ற இருவரை விசாரிக்க முயன்றபோது, ஒருவர் தப்பியோடினார்.மற்றொருவரிடம் விசாரித்தபோது, கரும்புக்கடை, திப்பு நகரை சேர்ந்த சாதிக்பாஷா, 30 மற்றும் தப்பியது அசோக் என தெரிந்தது.சாதிக்பாஷாவிடம், போதைக்காக பயன்படுத்தும் டெப்பன்டடால் 100 மி.கி., மாத்திரைகள் - 46 இருப்பது தெரியவந்தது. மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் சாதிக்பாஷாவை கைது செய்தனர். தப்பிய அசோக்கை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை