இளையோர், மூத்தோர் பூப்பந்தாட்ட அணிகளுக்கு வரும் 17ம் தேதி தேர்வு
கோவை: கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாணவியர் மற்றும் பெண்கள் பிரிவு அணிகளுக்கான தேர்வு வரும், 17ம் தேதி நடக்கிறது.நேரு ஸ்டேடியம் எதிரே கோவை மாநகராட்சி மைதானத்தில் காலை, 7:30 மணிக்கு தேர்வுத்திறன் போட்டிகள் நடக்கின்றன. இதில், இளையோர் பிரிவில் பங்கேற்கும் மாணவியர், கடந்த, 2005ம் ஆண்டு ஜன., 2ம் தேதி அல்லது அதற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.பெண்கள் பிரிவில் கலந்துகொள்ள வயது வரம்பு கிடையாது. மேலும், பங்குபெறும் வீராங்கனைகள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதேசமயம், வெளி மாவட்டங்களில் இருந்து கோவையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவியர், அதற்கான சான்றிதழுடன் பங்கேற்கலாம். இதில், தேர்வு செய்யப்படும் மாணவியர் மற்றும் பெண்கள் தலா, 10 பேர் அடங்கிய அணி, வரும், 30 மற்றும் டிச., 1ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்தில் நடைபெறும், 69வது இளையோர் மற்றும் 70வது பெண்கள் பிரிவுகளில் இடம்பெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பார்கள் என, பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.