உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுய உதவிக்குழுவினர் மரக்கன்றுகள் நடவு

சுய உதவிக்குழுவினர் மரக்கன்றுகள் நடவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வெள்ளாளபாளையம் கிராமத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.பொள்ளாச்சி அருகே, வெள்ளாளபாளையத்தில் தாமரை மகளிர் சுய உதவிக்குழுவினர், கிராம சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், இயற்கையை பாதுகாக்கும் விதமாக, ஊராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஊரின் முக்கியமான இடங்களில், பல வகையான, 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.பள்ளி தலைமையாசிரியர் ரஷியா பீபி, ஆசிரியர் சித்ரா, கள்ளிப்பட்டி தலைமையாசிரியர் மணிகண்டன் மற்றும் தாமரை மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.மரக்கன்றுகள் நடுவதன் அவசியம், பசுமையை பாதுகாப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்களிடம் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ