மேலும் செய்திகள்
வேளாண் பல்கலையில் தோட்டக்கலை விழா
19-Jul-2025
கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறை சார்பில், விவசாயத்துக்கான நவீன தொழில்நுட்பங்களுக்கான 15 நாட்களுக்கான விரிவுரை நடந்தது.மத்திய அரசின் ஸ்பார்க் மற்றும் பிரிட்டன் இந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்முயற்சி திட்டங்களின் கீழ், இந்நிகழ்ச்சி நடந்தது. இங்கிலாந்தின் டீசைட் பல்கலை பேராசிரியர் மைக்கேல் ஷார்ட் பங்கேற்றார்.அவர் தனது உரையில், தானியங்கி கட்டுப்பாட்டு முறைகள், செயற்கை நுண்ணறிவு, தொழிற்துறை 4.0 கருத்துரு, நீர்ப்பாசன மேலாண்மைக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசினார்.வேளாண் பொறியியல் கல்லூரி டீன் ரவிராஜ், உட்பட பல்கலை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
19-Jul-2025