உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தனித்தனி விடுதிகளுக்கு தனியாக பதிவு வேண்டும்

 தனித்தனி விடுதிகளுக்கு தனியாக பதிவு வேண்டும்

கோவை: பள்ளி, கல்லுாரிகளில், விடுதிகள் தனித்தனி இடங்களில் இருப்பின், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவும் தனியாக வைத்திருக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா அறிவுறுத்தியுள்ளார். சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி விடுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாணவர் விடுதிக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இருந்தது. வளாகத்திற்கு வெளியில் தனியாக இருந்த மாணவிகள் விடுதிக்கு பதிவு இல்லை. சுகாதாரமும் சரியாக பின்பற்றப்படவில்லை என, மாணவிகள் விடுதிக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பள்ளி, கல்லுாரிகள் எதுவானாலும் விடுதிகளுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு அவசியம். ஒரே வளாகத்திற்குள் மாணவர்கள், மாணவிகள் விடுதி அமைந்து இருப்பின் ஒரு பதிவு போதும். வெவ்வேறு இடங்களில் இருப்பின் தனித்தனி பதிவு வேண்டும். உணவு கையாள்வது எனில் தண்ணீர் உட்பட அனைத்து வகை உணவு தயாரிப்பு, வாங்கி விற்பனை செய்வது, விற்பனை, வினியோகம், பரிமாறுதல், வியாபாரம் என அனைத்தும் பொருந்தும். தனியார் கல்லுாரியில் ஆய்வு மேற்கொள்ளும் போது மாணவிகள் விடுதி, வளாகத்தின் வெளியில் தனியாக இருந்தது. ஆனால், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இல்லை; இதனால், நோட்டீஸ் வினியோகிக்கப் பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை