மேலும் செய்திகள்
கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை
26-Jun-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், ஏழாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், ஏழாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் மாலை, 5:00 மணிக்கு ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு ேஹாமம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார்.
26-Jun-2025