உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதான ரோட்டில் கழிவு நீர் தேக்கம்

பிரதான ரோட்டில் கழிவு நீர் தேக்கம்

உடுமலை : உடுமலை, தாராபுரம் ரோட்டில், பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக, சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.உடுமலை, தாராபுரம் ரோட்டில், ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த ரோட்டில் அமைந்துள்ள பாதாள சாக்கடை குழாய், ஆளிறங்கும் குழி உடைப்பு ஏற்பட்டுள்ளதோடு, திட்ட குளறுபடி காரணமாக கழிவு நீர் வெளியேறி வருகிறது.பிரதான ரோட்டில், குளம் போல் தேங்கும் கழிவு நீரால், துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மாதக்கணக்கில் ரோட்டில் கழிவு நீர் ஓடும் நிலையில், நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை