உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழிச்சாலையில் கழிவுநீர் வடிகால் பணி

நான்கு வழிச்சாலையில் கழிவுநீர் வடிகால் பணி

அன்னுார்; அன்னுாரில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துடன், கழிவுநீர் வடிகால் கட்டும் பணியும் துவங்கியுள்ளது. அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 கி.மீட்டருக்கு 20 மீ., அகலத்தில் சாலை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலையை ஒட்டி வடிகால் இல்லாத இடங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி சாலையை சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் கழிவுநீர் வடிகால் இல்லாத இடங்களில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக அன்னூரில், அவிநாசி சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சப் ரெஜிஸ்டிரார் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஒரு மீட்டர் உயரம் ஒரு மீட்டர் அகலத்திற்கு கழிவுநீர் செல்லும் அளவுக்கு வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை