சாந்திவனம் எரிவாயு தகனம் அக்.10 வரை செயல்படாது
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சாந்திவனம் எரிவாயு தகனக்கூடத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அக்.10ம் தேதி வரை தற்காலிகமாக செயல்படாது. மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், கோவிந்தம் பிள்ளை மயானத்தில், நகராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எரிவாயு தகனக்கூடம் உள்ளது. இதை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர், நிர்வாகம் செய்து வருகின்றனர். எரிவாயு தகன மேடையில், கூடுதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இன்று முதல் அக்டோபர் 10ம் தேதி வரை, மேட்டுப்பாளையம் எரிவாயு தகனக்கூடம் தற்காலிகமாக செயல்படாது. 11ம் தேதியிலிருந்து சாந்திவனம் மீண்டும் செயல்படும். எனவே பொதுமக்கள் இதற்கு ஏற்றார் போல், தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளவும். இவ்வாறு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறியுள்ளனர்.