மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
கோவை: கோவையில் கடை ஒன்றில், லிப்டின் இரும்பு கம்பி அறுந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார். கோவை, ரங்கே கவுடர் வீதியில் 'ஆஷிக் ஸ்டோர்' என்ற பெயரில், மூன்று தளங்களுடன் சிகரெட் மொத்த விற்பனை கடை செயல்படுகிறது. ஆறு ஆண்டு களாக, விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்த சுரேஷ், 36, என்பவர், கடையின் ஒரு பகுதியில் தங்கி, பணிபுரிந்து வந்தார். இக்கடையில் பொருட்களை மாடிக்கு கொண்டு செல்வதற்கும், கீழே கொண்டு வருவதற்கும் 'லிப்ட்' பயன்படுத்தப்படுகிறது. நேற்று காலை பணிக்கு வந்த சுரேஷ், மூன்றாவது மாடியில் இருந்து, சிகரெட் பண்டல்களை லிப்ட்டில் ஏற்றி கொண்டிருந்தார். திடீரென லிப்டின் இரும்பு கம்பி அறுந்ததில், மூன்றாவது மாடியில் இருந்து லிப்ட் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடை ஊழியர்கள் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடை வீதி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
05-Aug-2025