கொடிசியாவில் ஷாப்பிங் திருவிழா ஜன.1 வரை தினமும் ஜே ஜே
கோவை: 'கொடிசியா' சார்பில், 11வது கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நேற்று துவங்கியது. வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் திவாகர் பிரசாத், காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய, தென் மண்டல தலைமைச் செயல் அலுவலர் எல்.எம். ரெட்டி ஆகியோர் ஷாப்பிங் திருவிழாவைத் துவக்கி வைத்தனர். 9 மாநிலங்களில் இருந்து 500 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர், சமையலறை உபகரணங்கள், ஸ்டேஷனரிகள், குழந்தைகளுக்கான மினி வாகனங்கள், பொம்மைகள், மண் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், பூஜையறை அலங்கார பொருட்கள், சிலைகள், இறை உருவங்கள், உலர்பழங்கள் மற்றும் கொட்டைகள், தேங்காய் நார் மற்றும் சணல் பொருட்கள், பிறந்த குழந்தைகள், சிசுக்களுக்கான ஆடைகள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், காதி பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள், விளையாட்டு போட்டிகள் உள்ளன. புட் கோர்ட்டில் விருப்பமான உணவுகள் உள்ளன. சின்னத்திரை பிரபலங்கள் தினமும் மாலை 6:30 மணிக்கு, சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜன., 1ம் தேதி வரை காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி செயல்படும். துவக்க விழாவில், ஷாப்பிங் திருவிழா துணைத்தலைவர் வரதராஜன், கொடிசியா செயலாளர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.