குறுமைய விளையாட்டுப் போட்டி; அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
அன்னுார்; சர்க்கார் சாமகுளம் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அன்னுார் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 14 வயதுக்குட்பட்ட மாணவியர் கேரம் போட்டியில் ஹாசினி முதலிடம் பெற்றுள்ளார். இரட்டையர் ஆட்டத்தில் ஹாசினி, மேகதர்ஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் கேரம் போட்டியில் ஜீவிதா முதலிடம் பெற்றுள்ளார். 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் இரட்டை ஆட்டத்தில் கவினா, மஞ்சு ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர் கேரம் போட்டியில் ஹரிகரன் முதலிடம் பெற்றுள்ளார். இரட்டையர் ஆட்டத்தில் ஹரிகரன், விஷ்ணு முதலிடம் பெற்றுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர் கேரம் போட்டியில் விக்ரம் முதலிடம் பெற்றுள்ளார். இரட்டையர் இரட்டத்தில் விக்ரம் சுருதிசன் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 19 வயதுக்குட்பட்ட மேசைப்பந்து போட்டியில் யஷ்வந்த் இரண்டாம் இடம் பெற்றார். இரட்டையர் ஆட்டத்தில் யஷ்வந்த் பரமேஸ்வரன் முதலிடம் பெற்றனர். 19 வயது பிரிவில் கவிநிலா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். 19 வயது பிரிவில் பேட்மிட்டனில் கவின் குமார் இரண்டாம் இடம்பெற்றார். இரட்டையர் ஆட்டத்தில் கவின்குமார், பாலா ஹரி பிரசாத் இரண்டாம் இடம் பெற்றனர்.