குறு மைய தடகள போட்டி; எஸ்.ஆர்.எஸ்.ஐ. முதலிடம்
மேட்டுப்பாளையம் ; கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், 66வது குடியரசு தின, குறு மைய விளையாட்டு போட்டி, காரமடை அடுத்த புஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. மாணவியருக்கான இறுதி போட்டி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை ஜோதிமணி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மண்டல உடற்கல்வி ஆய்வாளர் கோவிந்தராஜன், போட்டியை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கந்தசாமி, ஜெயராமன், நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். 19 வயது 800 மீட்டர் ஓட்டத்தில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளி சுதர்சனா முதலிடம், எஸ்.எஸ்.வி.எம்., விதான் பள்ளி மாணவி காவியா ஸ்ரீ இரண்டாமிடம், மகாஜனப்பள்ளி மேல்நிலைப்பள்ளி ரக் ஷிமிதா மூன்றாமிடம் பெற்றனர். 17 வயது 800 மீட்டர் ஓட்டத்தில் காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி மாணவி ரம்ஷிதா முதலிடம், எஸ்.வி.ஜி.வி., பள்ளி மாணவி ஹேமப்பிரியா இரண்டாமிடம், எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி நேயாஸ்ரீ மூன்றாமிடம் பெற்றனர். 14 வயது 600 மீட்டர் ஓட்டத்தில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி மாணவி திக் ஷிகா முதலிடம், மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி சாரா ஏஞ்சலின் இரண்டாமிடம், எஸ்.எஸ்.வி.எம்., விதான் பள்ளி நிகாஸ்ரீ மூன்றாமிடம் பெற்றனர்.