உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒற்றை யானை விசிட்: மக்கள் அச்சம்

ஒற்றை யானை விசிட்: மக்கள் அச்சம்

வால்பாறை ; வால்பாறை, நகருக்குள் 'விசிட்' செய்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டினர்.வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுவதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.இந்நிலையில், வால்பாறை சவராங்காடு, ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த, 10 நாட்களாக ஒற்றையானை முகாமிட்டு தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது.நேற்று முன் தினம் காலை சவராங்காடு எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட ஒற்றையானை வால்பாறை நகரை ஒட்டியுள்ள கக்கன்காலனி, சிறுவர்பூங்கா உள்ளிட்ட குடியிருப்புக்குள் நுழைய முயன்றது.தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் ஒத்துழைப்போடு, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த சில நாட்களாக, வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் இருக்கும் நிலையில், தற்போது யானையும் வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ