மேலும் செய்திகள்
வாரச்சந்தையை மேம்படுத்தணும்
29-Apr-2025
மேட்டுப்பாளையம்: சிறுமுகை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி அலுவலகம் அருகே, வாரச்சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை வாரச்சந்தை செயல்படும். சிறுமுகையை சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னூர், புளியம்பட்டி, ஆகிய ஊர்களில் இருந்து, வியாபாரிகள் சந்தைக்கு வருவது வழக்கம். சந்தையில் பொருட்கள் வைத்து விற்பனை செய்யும் போது, மழை பெய்தால் பொருட்கள் சேதம் அடைந்து வந்தன. அதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 3.2 கோடி செலவில், எட்டு இடங்களில் மேல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், தலைவர் மாலதி ஆகியோர் கூறியதாவது: வார சந்தைக்கு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, விற்பனை செய்யப்படும் பொருட்கள் மழையில் சேதம் அடையாமல் இருக்க, எட்டு இடங்களில் மேல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கூரைகளில், 256 கடைகள் வைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரவில் பொருட்களை வைத்து விற்பனை செய்ய, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. விரைவில் வார சந்தை மேல் கூரை கடைகள் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
29-Apr-2025