மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை இருவர் கைது
17-Aug-2025
கோவில்பாளையம்:கீரணத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கோவில்பாளையம் போலீசார், நேற்று சோதனை நடத்தியதில், வடவள்ளி லோகநாதன், 22, கவுண்டம்பாளையம் முகமது அப்பாஸ், 24, அகமது பக்ருதீன், 20, மணிகண்டன், 25, விக்னேஷ், 20, அனுசுயா, 18 ஆகியோரை பிடித்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். எஸ்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போதைப்பொருள் விற்பனை செய்வோர், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் குறித்து, பொதுமக்கள் தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981 81212க்கு தகவல் தெரிவிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.
17-Aug-2025