பள்ளிகளில் திறன்+ தேர்வு துவங்கியது
கோவை: அரசுப்பள்ளிகளில் 2-9 வகுப்பு படிக்கும் மாணவர்களின், கற்றல் திறன் மேம்படுத்த, 'திறன் பிளஸ்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ், ஆங்கிலம், கணித பாடத்தில் தேர்வு நடத்தி, கற்றலில் பின்தங்கியோர் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துகளை அடையாளம் காண முடியாதோர், பிழையுடன் எழுதுதல், அடிப்படை கணிதத்திறன் இல்லாத மாணவர்கள் தேர்வு செய்யப்பவர். இவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும். இதற்காக பிரத்யேக வினாத்தாள் தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. 21 l துவங்கிய தேர்வு நாளை வரை நடக்கிறது. வினாத்தாளிலேயே விடை எழுத முடியும். அதை மதிப்பிட்டு, இம்மாத இறுதிக்குள், அந்தந்த பள்ளி 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில், சிறப்பு வகுப்பு தேவைப்படுவோரை, மாநில குழுவே தேர்ந்தெடுத்து பள்ளிகளுக்கு அனுப்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,'8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் செய்யப்படுவதால், 9ம் வகுப்பில் பல மாணவர்கள் படிக்க முடியாமல் திணறுகின்றனர். அந்தந்த வகுப்புக்கான குறைந்தபட்ச கற்றல் அடைவுத்திறனை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். அதை மதிப்பிடவே திறன் பிளஸ் தேர்வு நடத்துகிறோம். இதில் குறைந்த மதிப்பெண் பெறுவோருக்கு, பிரத்யேக சிலபஸ் உருவாக்கியுள்ளோம்,' என்றனர்.